8 ஆகஸ்ட், 2010

'கிராமியபாடல்' குழந்தைகளுக்கு...

"ஆராரோ அரிரரோ"

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மாதளங் கம்பாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொப்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு............

1 கருத்து:

  1. மிக அருமை, நண்பரே தாயை போல் நீர் தாலாட்டுவது தமிழை, வாழ உம் தமிழ் தொண்டு!

    பதிலளிநீக்கு